இடும்பவனம் & இடும்பி

அவனைப் பார்த்தவுடன் அவன் பால் ஈர்க்கப்பட்ட இடும்பி, அவர்களை உணவாக அவள் அண்ணனிடம் கொண்டு செல்லும் எண்ணத்தை மறந்தாள். பீமன் தன்னை பார்க்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அழகிய பெண் வடிவத்தை எடுத்து அவன் அருகே சென்றாள் . பீமனும் அவளைப் பார்த்தவுடன் அவள் மேல் காதல் கொண்டான்.

அர்ஜுனன்

காதலில் துறவி

தர்மரோ, அந்த சூழ்நிலை இந்த விதிமீறலுக்கு இடம் அளித்தது. எனவே பார்த்தனின் தவறு இதில் எதுவும் இல்லை என கூறினார். ஆனாலும், தான் சொன்னதை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தான் அவன். அங்கிருந்து பாரதம் முழுக்க வலம் வரத் துவங்கினான். முதலில் கிழக்குக் கடற்கரையோரமாக தனது யாத்திரையைத் துவங்கி பாரதத்தின் தென்கோடி முனையை அடைந்தான்.

கர்ணன்

சூரியனின் புத்திசாலி மகன் – கர்ணன்

தன்னால் விளையும் பாதகங்களை சூரியன் காண இயலாது. கர்ணனும் அதே போல் தான். விருப்பப்பட்டு இறுதிவரை அனைத்தையும் கொடுத்தான் அவனது மமதையை தவிர. இருந்தாலும், சூரியன் தனித்து வீற்றிருக்கிறார் உயிர் தந்து காப்பவராக. காரிருட்டிலும் சூரியன் தனியாக பிரகாசிக்கும்!!!

பதிலுக்கு பதில்…

இளம்பிராயத்து நினைவுகளும் துருபதனுடன் கழித்த இன்பமான நினைவுகளும் மனதில் தோன்ற பாஞ்சாலத்திற்கு சென்றார் துரோணர். அங்கே அரசவையில் துருபதனை நண்பனாய் நினைத்து பேச, அதிகாரத்தில் இருப்பதால் அகந்தையில் துருபதன் துரோணரை பிச்சைகாரன் என்றும் அரசரை நேரடியாக சந்தித்து பேச அருகதை இல்லை என்றும் அவமதித்தான்.

அம்பை

பழிவாங்கும் தீ – அம்பை

அந்த மாலையுடன் வலிமை மிகுந்த பல அரசர்களிடம் சென்று பீஷ்மரை தோற்கடிக்க உதவிக் கோரினாள். ஆனால் பீஷ்மரை பகைத்துக் கொள்ள எவரும் விரும்பாததால் அனைவரும் மறுத்துவிட, அம்பை துருபதனிடம் சென்றாள். துருபதனும் மறுத்துவிட, அவனின் அரண்மனை வாசலில் தாமரை மாலையை தொங்கவிட்டு காட்டுக்கு சென்றாள் அம்பை. அங்கே இருந்த சில முனிவர்கள் அவளை பரசுராமரை அணுகுமாறு கூற, பரசுராமரிடம் சென்றாள்

அஷ்ட வசுக்கள்

அஷ்ட வசுக்கள்

அவரது சாபம் கேட்டவுடன் அனைத்து வசுக்களும் பயந்து, நந்தினியை திரும்ப ஒப்படைத்து சாபத்தில் இருந்து விடுவிக்க கோரினர். ஒருமுறை சபித்தால் அதை மீண்டும் பெற இயலாது. இருந்தும், நந்தினி மீண்டும் வந்ததால் கோபம் தணிந்த வசிஷ்டர் ” அந்த ஒரு வசு மட்டுமே நந்தினியை திருட எண்ணியதால் , அவன் மட்டுமே மனிதனாக பிறந்து முழு வாழ்வும் வாழ்ந்து பின் இறப்பை சந்திக்க நேரிடும். மற்ற அனைவரும் பிறந்ததுமே சாபத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் வசுக்கள் ஆவீர்கள் ” என சாபத்தை மாற்றினார்.

நீதிபதிக்கு வழங்கப்பட்ட நீதி

ரிஷி, தனக்கு ஏன் இந்த நிலை வந்தது என அறிய விரும்பினார் , அதற்காக அவர் தர்மராஜனை காண சென்றார். ” நான் இது வரை எந்த உயிரினத்தையும் துன்புறுத்தியதில்லை. அப்படி இருக்க , இத்தகைய துன்பத்தை நான் அனுபவிக்க என்ன காரணம் ” ? என தர்மராஜனிடம் அவர் வினவினார்.

சாபக்காலத்தில் கிடைத்த வரம்

அதன் பின் மூவரும் காட்டினுள் சாதாரண வாழ்க்கை வாழத் துவங்கினர். சிறிது காலத்திற்கு பின் , தனக்கு வாரிசு உண்டாக்க முடியாமல் போனது குறித்து பாண்டுவிற்கு வருத்தம் உண்டாகியது. இதை பற்றி அறிந்த குந்தி, அவள் கன்னிப் பெண்ணாக இருந்த பொழுது , மகரிஷி துர்வாசர் அவளுக்கு கூறிய புனித மந்திரங்களை பற்றி பாண்டுவிற்கு கூறினாள்

யயாதி

சிற்றின்பம் மற்றும் உணர்திறன்

தவறுதலாக , இளவரசி சர்மிஷ்டை , தேவயானியின் உடைகளை அணிந்துகொண்டாள். இதை கண்ட தேவயானி ஒரு சீடனின் மகள் எவ்வாறு குருவின் மகளின் ஆடைகளை அணியலாம் என விளையாட்டாக கேட்டாள். இதனால் கோபம் அடைந்த சர்மிஷ்டை , ” என் தந்தை அளிக்கும் பிச்சையில் வாழ்பவரின் மகள் தானே நீ ? ” என அவளை அவமானப்படுத்தினாள். தான் விளையாட்டாக சொன்னது வினையானதை எண்ணி அவளை சமாதானப்படுத்த தேவயானி செய்த முயற்சிகள் வீணாகின

Chakravyuham: The Trap

Chakravyuham: The Trap

கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட கத்தியில் சஞ்சயின் கை ரேகை இருக்க அவனை கைது செய்து அழைத்து செய்யும் வழியில் அவன் தப்பிவிட , அவனை போலிஸ் துரத்தும் அதே சமயத்தில் அவனது நண்பனும் கொலையாகிறான். சில திருப்பங்களுக்கு பிறகு சஞ்சயின் மேனேஜரும் அவன் அலுவலகத்தில் வேலை செய்யும் ஷில்பாவும் தான் கொலையின் சூத்திரதாரிகள்