கர்ணன்

சூரியனின் புத்திசாலி மகன் – கர்ணன்

கௌரவர்கள் முகாமில் இருந்த வீரர்களில் துரியோதனின் கொள்கைகளை ஆதரித்தும் நம்மின் மனதில் இன்னும் இருப்பது ஒருவன்தான் , அது கர்ணன். அவனுக்கு அவன் தந்தை சூரியனைப் போல கொடுக்க மட்டுமே தெரியும். யாருடமிருந்தும் பெற தெரியாது. ஆனால் சில சமயம் சூரியன் சுட்டெரிக்கக்கூடும். அந்த கண்களை குருடாக்கும் ஒளியில் , தன்னால் விளையும் பாதகங்களை சூரியன் காண இயலாது. கர்ணனும் அதே போல் தான். விருப்பப்பட்டு இறுதிவரை அனைத்தையும் கொடுத்தான் அவனது மமதையை தவிர. இருந்தாலும், சூரியன் தனித்து வீற்றிருக்கிறார் உயிர் தந்து காப்பவராக. காரிருட்டிலும் சூரியன் தனியாக பிரகாசிக்கும்!!!

அர்ஜுனன் கர்ணனின் வள்ளல்தன்மையை பற்றி பிறர் புகழக் கேட்டு பொறாமை கொண்டு கிருஷ்ணனிடம் புலம்பினான். அவனுக்கு கர்ணனின் கொடைத்தன்மையை புரியவைக்க இரண்டு தங்க மலைகளை உருவாக்கி அதை மாலைக்குள் தானம் செய்ய கூறி ஆளுக்கு ஒரு மலையை கொடுத்தார் கிருஷ்ணன்.

அர்ஜுனன் அந்த தங்க மலையை வெட்டி வெட்டி வருவோர் போவோருக்கெல்லாம் கொடுத்தான். அப்படி இருந்தும் மாலைக்குள் அவனால் அதை முழுவதும் தானம் அளிக்க இயலவில்லை. கர்ணனோ, அந்த மலையை அப்படியே அவ்வழியே வந்த ஒருவனுக்கு தானம் அளித்து சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *